தேசிய விருது பெற்றதுக்காக சூர்யாவுக்கு வாழ்த்துக் கூறிய பொன்னியின் செல்வன் பிரபலம்

கடந்த சில காலங்களுக்கு முன்னர் சூர்யாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் ’சூரரைப்போற்று’. இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நேற்று சூர்யா தேசிய விருது பெற்றார். மேலும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Sooraraipottu, Ar Rahuman, Suriya, Jhothika, 1st Oct 2022

மேலும் இந்த படத்தை தயாரித்த 2டி நிறுவனத்தின் சார்பில் ஜோதிகாவுக்கும் தேசிய விருது கிடைத்தது. இவைதவிர இந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா, நாயகி அபர்ணா பாலமுரளி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர்களுக்கும் நேற்று தேசிய விருது வழங்கப்பட்டது.

Sooraraipottu, Ar Rahuman, Suriya, Jhothika, 1st Oct 2022

இந்த நிலையில் தேசிய விருது வாங்கிய சூர்யாவுக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அந்த வாழ்த்துக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இசைப்புயலின் இசைக்குறித்து அதிகம் தற்போது பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sooraraipottu, Ar Rahuman, Suriya, Jhothika, 1st Oct 2022