வெளியானது ‘லத்தி’ படத்தின் மாஸ் அப்டேட்

வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘லத்தி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் சற்றுமுன் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் லத்தி படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

மேலும் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘லத்தி’ திரைப்படத்தை அவருடைய நண்பர்களான ராணா மற்றும் நந்தா தயாரித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தில் நாயகியாக சுனைனா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வெளியாக உள்ளதுடன் அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் படப்பிடிப்பின்போது விஷாலுக்கு இரண்டு முறை காயம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘லத்தி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என்ற மாஸ் அப்டேட்டை விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version