வரலாற்று சாதனை படைத்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் நாள் வசூல்!!

’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்றைய முதல் நாள் வசூல் தமிழ் சினிமாவின் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் மட்டும் சுமார் 700 திரையரங்குகளிலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட இந்தியா என ஏராளமான திரையரங்குகளில் வெளியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவைதவிர இன்னும் பல திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆனது.

Manirathnam, Ponniyin Selvan, Lyca Production, 1st Oct 2022

இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 80 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 100 வருட தமிழ் சினிமாவில் முதல் நாளில் இதுவரை எந்த படமும் ரூ.80கோடி வசூல் செய்யாத வரலாற்று சாதனையை ‘பொன்னியின் செல்வன்’ படம் படைத்து உள்ளது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்த அட்டகாசமான போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Manirathnam, Ponniyin Selvan, Lyca Production, 1st Oct 2022