பிரபல பாடகர் ஒருவர் ஏரியுடன் கூடிய தீவை சொந்தமாக விலைக்கு வாங்கி உள்ளது மிகப்பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஏராளமான பாடல்களை பாடி அவரது பாடல்கள் மூலம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றவர் பிரபல பஞ்சாபி பாடகர் மிகாசிங். இந்த நிலையில் பாடகர் மிகாசிங் சொந்தமாக ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த தீவில் ஒரு ஏரியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏரியுடன் கூடிய இந்த தீவில் 7 படகுகள் மற்றும் 10 குதிரைகளும் உள்ளன என்பதும் தெரிய வருகிறது.

பாடகர் மிகா சிங் தான் வாங்கிய ஏரியுடன் கூடிய தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஏரியில் விசைப்படகில் செல்லும் காட்சிகள் உள்ளன. இருப்பினும் பாடகர் மிகாசிங் வாங்கிய தீவு இருக்கும் இடம் மற்றும் அதன் மதிப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் இந்தியாவிலேயே சொந்தமாக தீவு வைத்திருக்கும் முதல் பாடகர் மிகா சிங் என்றும் கூறப்படும் நிலையில் அவர் தான் உண்மையிலேயே அரசர் என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.