உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்து நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராமில் கருத்தை பதிவு செய்துள்ளார்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளிவந்த நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து பல திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருவது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படம் குறித்து நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராமில் கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : நந்தினி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும் நந்தினி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது தனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முதன்முதலாக அவரை பார்த்து நானே பொறாமை பட்டுள்ளேன் என்று கூறியுள்ள மீனா படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து நந்தினியின்கேரக்டருக்கு மீனா அனைத்து விதத்திலும் பொருத்தமானவர் என்றும் இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது துரதிஷ்டம் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஷில் பதிவுகளை செய்து வருகின்றனர்.