‘சாகுந்தலம்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. சமந்தாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி!

சமந்தா உட்பட மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சாகுந்தலம்’ என்ற திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் அதற்கான காரணத்தையும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

Sakunthalam, Samantha, pirakashraj, Gowthami, Aditi balan, Kabhir Sink, Mohanbabu, 29th Sep 2022

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் நவம்பர் 4ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இந்த படத்தை படக்குழுவினர் 3டி டெக்னாலஜியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதற்காக மேலும் சில நாட்கள் தேவைப்படும் என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்து உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Sakunthalam, Samantha, pirakashraj, Gowthami, Aditi balan, Kabhir Sink, Mohanbabu, 29th Sep 2022

‘சாகுந்தலம்’ திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்றாலும் ‘சாகுந்தலம்’ திரைப்படத்தை 3டி டெக்னாலஜியில் பார்க்கலாம் என்ற படக்குழுவினர்களின் அறிவிப்பு காரணமாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.