குஷ்பு தான் எனக்கு கால்ஷீட் தரவில்லை – சுந்தர் சி

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’காபி வித் காதல்’. இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் ஜெய் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் சுந்தர்சி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் தயாரிப்பாளராக குஷ்பு கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Coffe with Kadhal, Sundar C, Kushboo, Jai, Jeeva, Srikanth, 28th Sep 2022

இந்த விழாவில் குஷ்பு பேசிய போது, ‘ஊட்டியில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக ’காபி வித் காதல்’ இந்த படத்தின் ஷூட்டிங் நடந்தது என்றும் அப்போது தன்னை சுந்தர்.சி கண்டுகொள்ளவே இல்லை என்றும் ஒரு நாளாவது சூட்டிங் பார்க்க வருகிறாயா என்று கேட்கவே இல்லை என்றும் குஷ்பு காமெடியாக பேசினார். மேலும் எங்களுடைய திருமண நாளன்று வேறு வழியில்லாமல் நான் தான் ஊட்டி சென்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Coffe with Kadhal, Sundar C, Kushboo, Jai, Jeeva, Srikanth, 28th Sep 2022

மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற ’ரம் ரம் ரம் ஆரம்பம்’ என்ற பாடலில் நடிக்க என்னை அழைக்கவில்லை என்று குஷ்பு மேடையில் தெரிவித்துள்ளார். அப்போது அங்கிருந்த டிடி ‘இந்த பாடலில் குஷ்பு கட்டாயம் நடிக்க வேண்டும் என்று நாங்கள் சுந்தர் சியிடம் கேட்டபோது, குஷ்பு தான் எனக்கு கால்ஷீட் தரவில்லை என்று கூறினார்.இதற்கு பதிலளித்த குஷ்பு, ‘என்னிடம் படப்பிடிப்பிற்கு முதல் நாள்தான் கால்ஷீட் கேட்டார் என்றும் முதல் நாள் கேட்டால் எப்படி கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். இந்த சுவாரஸ்யமான உரையாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.