அந்த இடத்தில் ஆட்டோகிராப் போட சொன்ன ரசிகர்..அதிர்ச்சி அடைந்த ராஷ்மிகா மந்தனா என்ன செய்தார் தெரியுமா?

Reshmika Mandana, 28th Sep 2022

திரையுலகில் தமிழ் தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிஸியாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது ஒரே நேரத்தில் விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்து வருகிறார்.

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் அவரது ரசிகர் ஒருவர் தனது இதயத்தின் மேல் மார்பில் ஆட்டோகிராஃப் போடச் சொன்ன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, ‘இளம் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருடன் மறுக்காமல் செல்பி எடுத்துக்கொண்டார். அதன்பின் தனது மார்பில் ராஷ்மிகா ஆட்டோகிராப் போட வேண்டும் என்று அதே ரசிகர் கேட்டதால் ராஷ்மிகா அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் அந்த ரசிகர் கெஞ்சி கேட்டதை அடுத்து அவரது டீசர்ட்டில் தனது ஆட்டோகிராபை பதிவு செய்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version