பூஜா ஹெக்டேவுக்கு அறுவை சிகிச்சையா?

விஜய், பிரபாஸ், ராம்சரண் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பூஜா ஹெக்டேவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் பூஜா ஹெக்டேவுக்கு மூக்கில் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் அவரது மூக்கை அழகாக மாற்றுவதற்கு வெளிநாட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் இணையதளங்களில் மிக வேகமாக செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தி இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடித்த ‘பீஸ்ட்’, ‘பிரபாஸ் உடன் பூஜா ஹெக்டே நடித்த ‘ராதே ஷ்யாம்’, ராம்சரணுடன் பூஜா ஹெக்டே நடித்த ‘ஆச்சார்யா’ ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version