
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 முடிவடைந்து சீசன் 6 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவலும் அவ்வப்போது வெளியாகியவண்ணம் உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஏற்கனவே விஜய் டிவி பிரபலம் திவ்யதர்ஷினி என்ற டிடி ஒரு போட்டியாளர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
சரவணன் மீனாட்சி உள்பட ஒரு சில தொடர்களில் நடித்து வருபவர் மைனா நந்தினி தற்போது மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது.

மேலும் மைனா நந்தினி எப்போதும் கலகலவென்று பேசும் பழக்கம் உடையவர் என்பதால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.