தெலுங்கு சூப்பர்ஸ்டார் வீட்டில் நடந்த மற்றுமொரு மரணம் – திரையுலகினர் அஞ்சலி!!

Maheshbabu, Inthirathevi, 28 Sep 2022

பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரின் வீட்டில் நிகழ்ந்த மரணம் காரணமாக திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திராதேவி சமீபத்தில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்றார் என்றும் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த கிருஷ்ணாவின் மனைவி என்பதும் மகேஷ்பாபுவின் அம்மா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Maheshbabu, Inthirathevi, 28 Sep 2022

மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவியின் உடல் இன்று காலை 9 மணிக்கு பத்மாலயா ஸ்டூடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Maheshbabu, Inthirathevi, 28 Sep 2022

இந்த நிலையில் மகேஷ்பாபு தாயார் மரணம் குறித்து தகவல் அறிந்த தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்தநிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ‘இந்திராதேவி அவர்களின் மறைவு என்னை மிகவும் சோகத்திற்கு உள்ளாக்கியது என்றும் மகேஷ்பாபுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நடிகர் மகேஷ்பாபு சகோதரர் ரமேஷ் பாபு கடந்த ஜனவரி மாதம் காலமான நிலையில் தற்போது அவரது தாயாரும் காலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.