மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த தகவல்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘மாமன்னன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தநிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

Mari Selvaraj, Mamannan, Uthayanithi stalin, Danush, Karnan, Kalaiyarasan, 27th Sep 2022

இயக்குனர் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவான ’பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதனை அடுத்து தனுஷ் நடித்த ’கர்ணன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்த விடயம்.

Mari Selvaraj, Mamannan, Uthayanithi stalin, Danush, Karnan, Kalaiyarasan, 27th Sep 2022

இந்த நிலையில் அடுத்ததாக பிரபல ஓடிடி நிறுவனத்திற்காக ஒரு திரைப்படம் இயக்க இருப்பதாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. டிஜிட்டலில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் நடிகர் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.