ராஷ்மிகா மந்தனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் இன்ஸ்டாகிராம் பதிவு!!

பிரபல தமிழ், தெலுங்கு, பாலிவுட் நடிகையாக உருவாகியுள்ளவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது ’வாரிசு’ ’குட் பை’ ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Reshmka Mandana, Varisu, Pushpa2 , Goodbye, 27th Sep 2022

இந்தநிலையில் ராஷ்மிகா மந்தனாவுக்கு திடீரென முழங்கால் வலி ஏற்பட்ட நிலையில் விஜயவாடாவில் உள்ள மூட்டுவலி சிகிச்சை நிபுணர் டாக்டர் கவுரவ் ரெட்டி என்பவரை சந்தித்து சிகிச்சை பெற்று உள்ளார். இத்தகவலை டாக்டர் கவுரவ் ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது நோய் குறித்து பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ராஷ்மிகா சூட்டிங்கில் நடனமாடும் போது அவர் தனது மொத்த உடல் எடையையும் முழங்காலில் வைத்து நடனமாடுவதால் அவருக்கு முழங்கால் வலி ஏற்படுகின்றது. மேலும் ‘புஷ்பா’ படத்தில் சாமி சாமி பாடலுக்கு அவர் நடனமாடியதை நான் மிகவும் ரசித்தேன் என்றும் தற்போது ராஷ்மிகா மந்தனா மூட்டுவலி பிரச்சினை தீர்ந்து நலமாக உள்ளார். விரைவில் அவர் உங்களை மீண்டும் நடனமாடி மகிழ்விப்பார் என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version