‘பொன்னியின் செல்வன்’ படத்தில் உள்ள தவறை.. சுட்டிக்காட்டி லைகா நிறுவனத்திற்கு கடிதம் எழுதிய இலங்கை தமிழ் ரசிகர்!

மணிரத்னம் இயக்கத்தில் வரும் 30 ம் திகதி வெளியாகவுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தில் உள்ள தவறை இலங்கை தமிழ் ரசிகர் ஒருவர் சுட்டிக் காட்டி உள்ளதை அடுத்து திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Manirathnam, Ponniyin Selvan, Lyca Production, 27th Sep 2022

’பொன்னியின் செல்வன்’ படத்திற்காக படக்குழுவினர் இந்தியாவின் பல பகுதிகளிலும் வேறு சில நாடுகளிலும் புரமோஷன் செய்து வருகின்றனர் என்றும் தெரிந்ததே. சமீபத்தில் இந்தப் படத்திற்கான முன்பதிவு தொடங்கியிருந்த நிலையில் முன்பதிவில் மட்டுமே பெரும்சாதனை வசூல் செய்துள்ள நிலையில் ரிலீசுக்கு பின்னர் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கை தமிழ் ரசிகர் ஒருவர் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் உள்ள தவறு ஒன்றை சுட்டி காட்டி லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரணுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ’பொன்னியின் செல்வன்’ ஹிந்தி டிரைலரில் ‘சிங்கள நாடு’ என்று குறிப்பிட்டு இருப்பதாகவும், அதனை ‘ஸ்ரீலங்கா’ என்று மாற்ற வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும் அவர் லைகா நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு தான் மிகப்பெரிய ரசிகர் என்றும் இலங்கை தமிழரான தான் தற்போது பிரிட்டனில் உள்ளதாகவும் எனவே இந்த தவறை சரிசெய்யுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர்கள் வாழும் இலங்கை என்பது சிங்களவர்களின் நாடு என்பதை குறிக்கும் வகையில் சிங்கள நாடு என குறிப்பிடப்பட்டுள்ளதால் தான் மிகுந்த மனவருத்தம் அடைந்திருப்பதாகவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version