இளம் நடிகருடன் ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள் !!

Anchumalika, Roja, Thuruv Vikram, Vikram 27 Sep 2022

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ரோஜா ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

Anchumalika, Roja, Thuruv Vikram, Vikram 27 Sep 2022

நடிகை ரோஜா கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டுவருகிறார். நடிகை ரோஜா நகரி தொகுதியில் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தற்போது அவர் ஆந்திராவின் அமைச்சராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Anchumalika, Roja, Thuruv Vikram, Vikram 27 Sep 2022

இந்த நிலையில் நடிகை ரோஜாவின் மகள் இளம் தமிழ் நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கல் சில வெளியாகி உள்ளன. நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா என்பவர் தெலுங்கு திரையுலகில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டது.

Anchumalika, Roja, Thuruv Vikram, Vikram 27 Sep 2022

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ரோஜா கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த பேட்டி ஒன்றில் தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர் அன்ஷூவை கதாநாயகியாக நடிக்க வைக்க தன்னிடம் அணுகியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவில் படிப்பை முடித்த அன்ஷூ, தற்போது நடிப்பு பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.