‘தலைவர் 170’ படத்திற்கு ரஜினியின் சம்பளம் இத்தனை கோடியா?

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில் ’ஜெயிலர்’ படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்து 80 கோடி ரூபாய் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ’தலைவர் 170’ திரைப்படத்திற்காக அதைவிட அதிகமாக சம்பளத்தை லைகா நிறுவனம் அவருக்கு தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ’டான்’ படத்தின் இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகயிருக்கும் ’தலைவர் 170’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளிவந்திருந்தாலும் கிட்டத்தட்ட இப்போதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்காக லைகா நிறுவனம் ரஜினிகாந்த்துக்கு ரூபாய் 120 கோடி சம்பளம் தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அஜித் நடிக்கும் ’ஏகே 62’ படத்திற்காக லைகா நிறுவனம் அஜித்துக்கு 105 கோடி சம்பளம் வழங்க ஒப்புக் கொண்டதாகவும் அதேபோல் நடிகர் விஜய் நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படத்திற்காக 120 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’தலைவர் 170’ படத்திற்காக ரஜினியும் 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Exit mobile version