ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்!

வரும் 30ஆம் தேதி பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது படம் ரிலீஸ் தேதியை நெருங்கி வரும் நிலையில் புக்கிங் படு வேகமாக நடக்கிறது. ப்ரீ புக்கிங் தொடங்கி இதுவரை உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 15 கோடி வரை வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ப்ரீ புக்கிங் திறந்த உடனே சில மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது மேலும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ponniyin selvan vikram