அட்லீ-விஜய் இணையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் படத்தின் பிரமிக்கவைக்கும் பட்ஜெட்!

அடுத்து விஜய் நடிக்க இருக்கும் திரைப்படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இத்திரைப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விஜய் தற்போது தெலுங்கு இயக்குனருடன் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் அட்லீ பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

இப்போது அட்லீ-விஜய் இணையப்போகும் புதிய படம் குறித்து ஓரு தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த புதிய படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தான் தயாரிக்க இருக்கிறார்களாம். அதுவும் பட்ஜெட் ரூ. 300 கோடி என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

atlee vijay