விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ். இந்நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
இந்த பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ள போகிறவர்கள் என நிறைய பிரபலங்களின் பெயர் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் 6வது சீசனில் பங்குகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
வனிதா விஜயகுமாரை தற்போது கழட்டிவிட்டுள்ள விஜய் டிவி, அவருக்கு ஆப்படிக்கும் நோக்கில் தான் ராபர்ட் மாஸ்டெரரை களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் டிஆர்பி யை அதிகரிக்கமுடியும் எனவும் பிக் பாஸ் குழு எதிர்பார்த்துள்ளது.