உலக அளவில் புரமோஷன் செய்யும் ‘பொன்னியின் செல்வன்’ டீம்!

30ஆம் தேதி வெளியாகவிருக்கும் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் உலக அளவில் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.

Ponniyin Selvan, maniratnam, 25th Sep 2022

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் புரமோஷன் செய்த படக்குழுவினர் உலக அளவிலும் டிஜிட்டல் முறையில் புரமோசன் செய்து வருகின்றனர். அந்த வகையில் லாஸ் வேகாஸில் உள்ள ஒரு பிரம்மாண்டமான திரையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டிரைலர் நேற்று திரையிடப்பட்டது. இந்நகரில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படத்தின் டிரைலர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Ponniyin Selvan, maniratnam, 25th Sep 2022

அதேபோல் ஹாலிவுட் மலைப்பகுதியில் பொன்னியின் செல்வன் பேனருடன் விமானம் ஒன்று வட்டமிட்டு உள்ளது. ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது என்பதால் தான் இந்த படத்தின் புரமோஷனுக்காக பல கோடிகளை லைகா நிறுவனம் செலவு செய்துள்ளது என்பதும், அதன் பயனாக முன்பதிவு தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் முதல் நாளில் உள்ள அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்பனை முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் முதல் நாளுக்கான காட்சியின் அனைத்து டிக்கெட்டுக்களும் முன்பதிவு முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.