தற்காப்புக்கலை பயிற்சியில் ஈடுபடும் காஜல் அகர்வால்

இயக்குனர் ஷங்கரின் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த படப்பிடிப்பில் கமல் ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை காஜல்அகர்வால் களரிப்பட்டு என்ற தற்காப்புக்கலை பயிற்சி செய்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்தவகையில் களரிப்பட்டு பயிற்சி எடுத்து வரும் காஜல் அகர்வால் இந்த கலை குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Kajal agarwal, Indian 2, Kamalhazaan, 25th Sep 2022

அவர் கூறியிருப்பது களரிப்பட்டு என்பது ஒரு பண்டைய இந்திய தற்காப்புக் கலையாகும். இது ‘போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் கலைகளில் ஒன்று. இந்த களரி பொதுவாக கொரில்லாப் போருக்கு பயன்படுத்தப்பட்டது. இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்தும் ஒரு அழகான நடைமுறையாகும். இந்த கலையில் இருந்து தான் ஷாலின், குங் ஃபூ மற்றும் கராத்தே போன்ற பிற கலைகள் உருவானது.

3 ஆண்டுகளாக இடைவிடாமல் முழு மனதுடன் இந்த கலையை எனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் என்னை பொறுமையாக வழி நடத்தியதற்கும், இந்த கலையை சிறப்பாக கற்று கொடுத்ததற்கும் நன்றி’ என பகிர்ந்துள்ளார்.

களரிப்பட்டு என்ற தற்காப்புக்கலையை நிஜமாகவே கற்று, ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதால் அவரது கேரக்டர் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.