சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு நடந்த விபரீதம்

Ludshmi Vasudevan, 25th Sep 2022

’சரவணன் மீனாட்சி’, ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘எனது மொபைல் எண்ணுக்கு மெஸேஜ் ஒன்று வந்தது என்றும் அதில் உங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் லக்கி மணி கிடைத்திருக்கிறது என்றும் கூறப்பட்டிருந்தது. அந்த லிங்கை நான் கிளிக் செய்தவுடன் ஒரு செயலி தானாகவே டவுன்லோட் ஆகிவிட்டது என்றும் அதற்கு அடுத்த ஒரு சில நிமிடங்களில் போன் ஹேக் ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

மேலும் சில நாட்கள் கழித்து நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் லோன் வாங்கி இருக்கிறீர்கள் உடனே கட்ட வேண்டுமென வாய்ஸ் மெசேஜ் வந்தது என்றும் அந்த பணத்தை கட்டவில்லை என்றால் உங்கள் காண்டாக்ட் நம்பர்களுக்கு உங்கள் புகைப்படங்களை அனுப்புவோம் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

அப்போதுதான் தனக்கு விஷயம் சீரியஸ் என புரிந்து சைபர் கிரைமில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் தனது புகைப்படங்களை மோசமாக ஆபாச முறையில் மார்பிங் செய்து தனது நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும் அதனால் தற்போது அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே உங்கள் போனுக்கு லக்கி மணி என்று மெசேஜ் வந்தால் தயவுசெய்து எந்த செயலியையும் டவுன்லோட் செய்து விடாதீர்கள் என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.