பிக்பாஸ் ரகசியங்களை உடைக்கும் நடிகை அனுஸ்ரீ

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர்பிக்பாஸ் தெலுங்கு சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய், சூர்யா நடித்த ’பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் நடித்த நடிகை அனுஸ்ரீ இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பதும் பிக்பாஸில் முதல் நபராக வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அளித்த பிரத்யேக பேட்டியில் அனுஸ்ரீ கூறும்போது பல பிக்பாஸ் ரகசியங்களை போட்டு உடைத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது “பிக்பாஸ் நிகழ்ச்சி நீங்கள் நினைப்பது மாதிரி எதுவும் இல்லை என்னை அவர்கள் ஒரு நிமிடம் கூட காட்டவில்லை என்றும் எனது அம்மா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொறுப்பாளர்களிடம் போராடியும் என்னுடைய காட்சியை அவர்கள் ஒளிபரப்பவே இல்லை” என்றும் கூறியுள்ளார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பல ரகசியங்களை அவர் போட்டு உடைத்துள்ள நிலையில் அவை அனைத்தையும் கீழே உள்ள இந்த வீடியோவில் பார்க்கலாம். நடிகை அனுஸ்ரீ கடந்த 80, 90களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர வேடத்தில் நடித்த அனுராதாவின் மகள் என்பதும் இவர் நடிகை மற்றும் நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.