இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுடன் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் எடுத்த மாஸ் புகைப்படம்

மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை தொடர்ந்து வரும் தகவல்களில் பார்த்து வருகிறோம்.

Trisha, Aishwarya rai, PonniyinSelvan, AR Rahuman, Maniratnam, 25th Sep 2022

குறிப்பாக நேற்று மும்பையில் புரமோஷன் நிகழ்ச்சி படக்குழுவினர்களுடன் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந் நிகழ்ச்சியில் மணிரத்னம், ஏஆர் ரகுமான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trisha, Aishwarya rai, PonniyinSelvan, AR Rahuman, Maniratnam, 25th Sep 2022

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துள்ள த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் அவர்களும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மும்பை புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.