இதுவரை இல்லாத உச்சத்தை தொடும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ஓடிடி ரிலீஸ்!!

தேசிய விருது பெற்ற ’மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் ‘மாவீரன்’. இப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கான வியாபாரம் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Barath Shankar, Vithuiyanar, Aditi Shankar, Sivakarthikeyan, Maveeran, 25th Sep 2022

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கர் நடிக்கிறார். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை 34 கோடி ரூபாய் கொடுத்து ‘அமேசான் பிரைம்’ பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் திரைப்படம் ஒன்றின் ஓடிடி உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகி இருப்பது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

Barath Shankar, Vithuiyanar, Aditi Shankar, Sivakarthikeyan, Maveeran, 25th Sep 2022

இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.மேலும் இந்தப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளிலும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.