நடிகர் போண்டாமணி சிகிச்சைக்கு உதவி செய்யும் தனுஷ்

காமெடி நடிகர் போண்டாமணி இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தற்போது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார். அவரது சிகிச்சைக்கான செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்திருந்தார்.

Danush, Bondamani, Vijay Sethupathi, 25th Sep 2022

இருப்பினும் திரையுலக நட்சத்திரங்கள் பலர் இவருக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்ச ரூபாய் போண்டாமணி குடும்பத்திற்கு கொடுத்தார் என்பதை பார்த்தோம்.

Danush, Bondamani, Vijay Sethupathi, 25th Sep 2022

தற்போது நடிகர் தனுஷ் ஒரு லட்ச ரூபாய் போண்டாமணிக்கு நிதியுதவி அளித்துள்ளார். இதுகுறித்து போண்டாமணி வீடியோ ஒன்றில் கூறிஇருப்பதாவது ’தனுஷ் தம்பி அவர்களுக்கு நன்றி. நீங்கள் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் என்னிடம் வந்து சேர்ந்தது. சரியான நேரத்தில் நீங்கள் செய்த உதவி எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய உதவியாக உள்ளது. அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, தனுஷை அடுத்து மேலும் சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.