சிம்புவின் ‘பத்து தல’ படம் குறித்து வெளியாகும் மாஸ் தகவல்

நடிகர் சிம்புவின் அடுத்த படமான ’பத்து தல’ படத்தின் மாஸ் அப்டேட் தற்போது வெளிவந்துள்ள நிலையில் சிம்பு ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

AR. Rahuman, Simbu, Gowtham Karthik, Paththuthala, Venthuthaninthathu Kaadu, Priya Bavani Shankar, Krishna, 25th Sep 2022

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை அடுத்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’பத்து தல’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்குவதாகவும், சென்னையில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் பெல்லாரியில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

AR. Rahuman, Simbu, Gowtham Karthik, Paththuthala, Venthuthaninthathu Kaadu, Priya Bavani Shankar, Krishna, 25th Sep 2022

மேலும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கின்ற நிலையில் ஒரு பக்கம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 14ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படக்குழுவினர் பணிகளை முடிப்பதில் தீவிரமாக உள்ளனர்.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார்.