2023 பொங்கல் விருந்தாக ஒரே நாளில் வெளியாகவிருக்கும் ‘தல’ ‘தளபதி’ திரைப்படங்கள்.

Ajith, Vijay, RK Suresh, Varisu, Thunivu, 25th Sep 2022

2023 ஆண்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ மற்றும் தல அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரேநாளில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பொங்கல் தினத்தில் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் ரிலீஸ் ஆவது உறுதி என பிரபல நடிகர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ajith, Vijay, RK Suresh, Varisu, Thunivu, 25th Sep 2022

தளபதி விஜய் நடிபில் உருவாக்கி வரும் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னரே உறுதி செய்யப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித் நடிப்பில் உருவாகும் ‘துணிவு’ படத்தின் படக்குழுவினர் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றுள்ள நிலையில் இன்னும் 20 நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விடுவார்கள் என்றும் ‘துணிவு’ திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறபடுகின்றது.

நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் ‘துணிவு’ ரிலீஸ் ஆகிறது என்று பதிவு செய்திருக்கிறார். இதனை அடுத்து விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜீத்தின் ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Ajith, Vijay, RK Suresh, Varisu, Thunivu, 25th Sep 2022

விஜய்யின் ’ஜில்லா’ மற்றும் அஜீத்தின் ’வீரம்’ ஆகிய இரண்டு படங்களும் கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.