‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்துடன் இணையும் ‘கேஜிஎஃப் 2’ பட நடிகர்.

‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிவிட்டது என்பது பற்றி முன்பு வந்த தகவல்கள் மூலம் அறிந்துகொண்டோம்.

Jailer, Rajinikanth, Sivarajkumar, Harish Rai, Ramyakrishnan, Jikibabu, Vinayakan, Aranthanki nisha, 25th Sep 2022

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை தமன்னா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ’கேஜிஎப் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஹர்ஷ் ராய் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ’கேஜிஎப் 2’ படத்தில் நாயகன் யாஷ் உடன் படம் முழுவதும் ட்ராவல் செய்யும் கேரக்டரில் நடித்தவர் நடிகர் ஹர்ஷ் ராய்.

Jailer, Rajinikanth, Sivarajkumar, Harish Rai, Ramyakrishnan, Jikibabu, Vinayakan, Aranthanki nisha, 25th Sep 2022

கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட ஹரிஷ் ராய், தற்போது குணமாகி வருகிறார் என்பதும் அவர் முழுவதுமாக குணமாகியவுடன் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஹரிஷ்ராய், ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ்குமார் ஆகிய இருவருடன் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார்.