‘பிரின்ஸ்’ ஜெஸிக்கா பாடல் செம ஹிட் உற்சாகத்தில் ரசிகர்கள் !

வரும் தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நேற்று இரவு வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Mariya, Sivakarthikeyan, Prince, Thaman, 24th Sep 2022

மேலும் இந்தப்பாடலில் சிவகார்த்திகேயனின் செம டான்ஸ் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பாடலில் வந்துள்ள பாண்டிச்சேரியின் அழகிய சாலைகள், சொக்கவைக்கும் கலர்ஃபுல் செட்டுகள் மற்றும் இசையமைப்பாளர் தமனின் கேமியோ தோற்றம் ஆகியவை இந்த பாடலின் சிறப்பு அம்சங்களாக காணப்படுகின்றன.

இந்தப்பாடலின் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் உக்ரைன் நடிகை மரியாவின் கொள்ளை அழகு ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக உள்ளது. இசையமைப்பாளர் தமன் கம்போஸ் செய்து பாடியிருக்கும் இந்த பாடலை அறிவு எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இந்தப்பாடல் அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கில் உருவாகியிருகும் இந்த படம் சிவகார்த்திகேயனின் ஹாட்ரிக் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.