‘பொன்னியின் செல்வன்’குந்தவை மற்றும் நந்தினி நகைகள் விற்பனை – போட்டி போட்டு வாங்கும் ரசிகர்கள்

’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த த்ரிஷா மற்றும் நந்தினி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவருக்கும் ஒரிஜினல் தங்க நகைகளை பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நகைகள் நகை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் இதனையடுத்து அந்த நகைகளை வாங்க பொது மக்கள் போட்டி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகள் குறித்து கல்வெட்டுகளில் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நிஜமாகவே தங்கத்தில் நகைக்கலைஞர்கள் செய்த நகைகள் தான் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டன.

Ponniyin selvan, Ishwaryarai, trisha, 24th sep 2022

இந்த படத்தின் குந்தவை மற்றும் நந்தினி அணிந்து வரும் நகைகளை போன்ற டிசைன்களில் முன்னணி நகைக்கடை நிறுவனங்கள் ’தி சோழா கிங்’ என்ற பெயரில் நகைகளை டிசைன் செய்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளதாகவும் அந்த நகைகளை பொது மக்கள் போட்டி போட்டு வாங்குவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ’பொன்னியின் செல்வன்’ சேலை பெண்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் தற்போது நகைகள் விற்பனைக்கு வந்துவிட்டன.

Ponniyin selvan, Ishwaryarai, trisha, 24th sep 2022

அதுமட்டுமின்றி ’பொன்னியின் செல்வன்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரிஜினல் தங்க நகைகள், ஐம்பொன் நகைகள், கவரிங் நகைகள் ஆகியவற்றை ஏலம் விடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்ததையடுத்து அந்த நகைகளை ஏலம் எடுக்கவும் பொதுமக்கள் ஆர்வத்தில் உள்ளனர்.