விளம்பரத்தில் நடிக்க தொடங்கியுள்ள ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார்.

அவரின் முதல் திரைப்படத்திலே அனைவரின் பாராட்டுகளை பெற்று இருந்தார் அதிதி. மேலும் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது அதிதி ஷங்கர் விளம்பரங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். விளம்பரத்தில் அதிதி நடிகை ராதிகாவுடன் நடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.