இப்படி ஒரு தோழி நமக்கு இருக்க மாட்டார்களா என ஒவ்வொரு ரசிகரும் ஏங்கும் அளவுக்கு தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் பிரமாதமாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகை நித்யா மேனன். இந்தநிலையில் இவரது சிறுவயது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதையடுத்து அப்பவே எவ்வளவு க்யூட்டா இருக்கார் என ரசிகர்கள் தமது பதிவுகளை செய்து வருகின்றனர்.

திரையுலகில் ‘180’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். ஏற்கனவே கடந்த 1998ஆம் ஆண்டு ‘ஹனுமன்’ என்ற திரைப்படத்தில் நித்யா மேனன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ‘ஹனுமன்’ என்ற இந்த படத்தில் நடிகை தபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நித்யா மேனன் நடித்துள்ள காட்சிகளின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சமீபத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படத்தில் சோபனா என்ற கேரக்டரில் மிகவும் சிறப்பாக நடித்த நித்யா மேனனுக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவரது நடிப்புக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அவர் க்யூட்டாக இருக்கும் சிறுவயது வீடியோவை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.