வித்தியாசமான கேரக்டரில் கார்த்தி நடிக்க இருக்கும் ’ஜப்பான்’ படம் குறித்த தகவல்

கார்த்தி நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனை அடுத்து கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்த ’சர்தார்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

Karthi, Jappan, Raji murukan, Vijay sethupathi, Sarthar, 22th Sep 2022

எனவே கார்த்தியின் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில் கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Karthi, Jappan, Raji murukan, Vijay sethupathi, Sarthar, 22th Sep 2022

மேலும் இந்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் தற்போது அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கதகவல்கள் வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிக்கும் இந்த படத்திற்கு ’ஜப்பான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஜீவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் மேலும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு சில தகவல்கள் வெளிவந்தாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதே உண்மை.

இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கேரக்டரில் கார்த்தி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஒத்திகை பயிற்சிகளில் கார்த்தி ஈடுபட்டு வருவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.