இது தான் துணிவு படத்தின் கதையா? பஞ்சாப் மாநிலத்தின் நடந்த உண்மை சம்பவம்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘துணிவு’ . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்திருந்தது. இந்தப்படத்தின் கதை ஒரு வங்கி கொள்ளை குறித்தது என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

Thunivu, Ajithukumar, H Vinoth, 22th Sep 2022

இந்த நிலையில் இந்த படத்தின் கதை பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் தழுவல் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1985ஆம் ஆண்டு 12 முதல் 15 சீக்கியர்கள் காவல்துறை சீருடை அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் வங்கியில் கொள்ளையடிக்க சென்றனர் என்றும் அவர்கள் கொள்ளையடித்த மொத்த பணத்தின் மதிப்பு சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் என்றும் கூறப்படுகிறது.

இந்திய வங்கி கொள்ளை வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய கொள்ளை என்றும் அதுமட்டுமின்றி இந்த கொள்ளை நடந்தபோது வங்கி ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியை கொள்ளை அடித்தவர்கள் என ஒருவர் கூட சிறிய காயம் கூட அடையவில்லை என்றும், அந்த அளவுக்கு பக்காவாக திட்டமிட்டு நடந்த ஒரு பிரமாதமான கொள்ளை என்று போலீசாரே பாராட்டி இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Thunivu, Ajithukumar, H Vinoth, 22th Sep 2022

இந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் எச் வினோத் ‘துணிவு’ படத்தை எடுத்திருப்பதாக கூறப்படுவதை அடுத்து இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது