சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தின் இரண்டாவது பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள்

தீபாவளி விருந்தாக சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அக்டோபர் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் முதல் வந்த தகவல்கள் மூலம் தெரிந்துகொண்டோம்.

Mariya, sivakarthikeyan, Sathyaraj, Thaman, 22th Sep 2022

இந்த நிலையில் ‘பிரின்ஸ்’ படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி மற்றும் நேரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரின்ஸ்’ படத்தின் தமன் இசையில் உருவாகியுள்ள இரண்டாவது சிங்கிள் பாடலான ‘ஜெஸிக்கா’ என்ற பாடல் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என்றும் இந்த பாடல் முதல் சிங்கிள் பாடல் போலவே நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mariya, sivakarthikeyan, Sathyaraj, Thaman, 22th Sep 2022

மேலும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

adbanner