‘புஷ்பா 2’ படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட இருக்கும் பிரபல நடிகை

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த ’புஷ்பா’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் ஆண்ட்ரியா குரலில் உருவான ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு சமந்தா ஒரு ஐட்டம் டான்ஸ் நடனம் ஆடி இருந்தார். இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

Malaika arora, Pushba 2, allu arjun, samantha, 22th Sep 2022

இந்த நிலையில் ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் இடம் பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புஷ்பா 2 படத்திலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாட படக்குழுவினர் சமந்தாவிடம் அணுகிய நிலையில் அவர் ஆட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஒரு சில நடிகைகளிடம் இந்த பாடலுக்கு நடனமாட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா இந்த பாடலுக்கு நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மலாய்கா அரோரா மணிரத்னம் இயக்கிய ’உயிரே’ என்ற திரைப்படத்தில் ’தக்க தையா’ என்ற பாடலுக்கும் அதே போல் பல பாலிவுட் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமந்தாவின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் போல் இந்த பாடல் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Exit mobile version