செளந்தர்யா ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் நேற்று சௌந்தர்யா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு அவரது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Soundarya rajinikanth, Superstar rajinikanth, 21th Sep 2022

சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பது நமக்கு தெரிந்ததே. இந்த நிலையில் இவரது பிறந்தநாள் அன்று கையில் குழந்தையுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் உட்கார்ந்திருப்பதும் அவர் பின்னால் ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Soundarya rajinikanth, Superstar rajinikanth, 21th Sep 2022

மேலும் சௌந்தர்யா தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்வதாக கூறியதுடன் கடவுள் எனக்கு இந்த ஆண்டு பிறந்த நாள் பரிசாக ஒரு மிகச் சிறந்த வீர் பாப்பாவை கொடுத்துள்ளதாகவும் அதற்கு கடவுளுக்குத்தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கடவுளின் குழந்தை என் பின்னால் இருப்பதாகவும் அவரது உண்மையான ஆசீர்வாதம் தனக்கு இருப்பதாகவும் அவர் பெருமையுடன் ரஜினிகாந்தை குறிப்பிட்டுள்ளார்.