மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி செண்டை மேளம் இசைத்த பிரபல நடிகர் விக்ரம் !!

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படக்குழுவினர் கேரளா சென்றபோது நடந்த புரமோஷன் விழாவில் இந்த படத்தின் ஹீரோக்களில் ஒருவர் செண்டை மேளம் இசைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ponniyin Selvan, Manirathnam, Vikram , 21th Sep 2022

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் பணிக்காக புரமோஷன் படக்குழுவினர் இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ’பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் கேரளா சென்ற போது மிகப்பெரிய வரவேற்பை அப்பகுதி மக்கள் அளித்தனர். இந்த நிலையில் கேரளாவில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கேரளாவில் பிரபலமான செண்டை மேளம் வாசித்து படக்குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Ponniyin Selvan, Manirathnam, Vikram , 21th Sep 2022

அப்போது அங்கு சென்ற நடிகர் விக்ரம் ஆர்வ மிகுதியால் களத்தில் இறங்கி செண்டை மேளம் இசைத்தார். இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து செண்டையுடன் உங்களின் இதயத்துடிப்பு சிங்க் ஆவதை போல வேறு எதுவும் அமையாது என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

adbanner