லோகேஷ் கனகராஜூக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்

‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இப்படத்தின் இயக்குனருக்கு ’லோகேஷ் சினிமா யுனிவர்ஸ்’ என்ற பட்டத்தை ரசிகர்கள் வழங்கினார்கள் என்பது தெரிந்ததே. இயக்குனர் லோகேஷ் தனது படங்களில் தனதுபழைய படங்களின் காட்சிகளை இணைத்து கதையை உருவாக்குவதால் அவருக்கு இந்த பட்டத்தை ரசிகர்கள் வழங்கி உள்ளார்கள்.

Anurag kashyap, Logesh Kanakaraj, kaithi, Vikram, 21th sep 2022

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் லோகேஷின் யுனிவர்ஸில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஒரே நாளில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

Anurag kashyap, Logesh Kanakaraj, kaithi, Vikram, 21th sep 2022

‘கைதி’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய திரைப்படங்களை ஒரே நாளில் பார்த்து இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு பாராட்டு தெரிவித்துள்ள அனுராக் காஷ்யப் லோகேஷின் யுனிவர்ஸில் நானும் இணைய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

adbanner