‘செக்க சிவந்த வானம்’ படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ??

கடந்த காலத்திற்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் மாஸ் நடிகர்களாகிய அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் சிம்பு ஆகிய நான்கு முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்த ’செக்கச்சிவந்த வானம்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தொகுப்பாளர் ஒருவர் இந்த படத்தை கெளதம் மேனன் இயக்கியதாக அவரிடம் கேள்வி கேட்ட வீடியோ இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Gawtham Menon, Manirathnam, Simbu, Vijay Sethupathy, Arunvijay, Aravindsami, 21th Sep 2022

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு மீடியா ஒன்றில் இயக்குனர் கெளதம் மேனனிடம் பேட்டி எடுத்தபோது தொகுப்பாளர், செக்க சிவந்த வானம்’ படத்தை இயக்கிய அனுபவத்தை கூறுங்கள் என்று கேட்டபோது கௌதம் மேனன் ஒரு நிமிடம் குழப்பம் அடைந்த நிலையில் அதன்பின் அவர் அந்த கேள்வியை எளிதாக எடுத்துக் கொண்டு பதிலளித்தார். அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு ஆகிய நான்கு நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைப்பது எனக்கு வேண்டுமானால் கஷ்டமான காரியமாக இருக்கலாம், ஆனால் மணிரத்னம் அவர்களுக்கு இது மிகவும் எளிதான காரியமாக அமைந்தது என்று மணிரத்னத்தை பெருமையாக கூறி, தொகுப்பாளருக்கு அந்த படத்தை இயக்கியது மணிரத்னம் என்பதை புரிய வைத்தார்.

Gawtham Menon, Manirathnam, Simbu, Vijay Sethupathy, Arunvijay, Aravindsami, 21th Sep 2022

மேலும் சிம்புவை பற்றியும் நகைச்சுவையுடன் கூறியுள்ளார். என்னுடைய படத்தில் சிம்பு நடிக்கும் போது காலை 7 மணிக்கு வரலாம் என்றும் ஆனால் மணிரத்னம் படத்தில் நடிக்கும்போது அதிகாலை 5 மணிக்கு வர வேண்டும் என்றும் நகைச்சுவையுடன் அவர் கூறினார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.