’இந்தியன் 2’ படத்திற்காக புதுப்புது திறன்களை கற்று வருவதாக கூறும் காஜல் அகர்வால்!!

கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. தற்போது படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்ற நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகை காஜல் அகர்வால் இப்படத்திற்கு ரிஸ்க் எடுத்து நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

KajalAgarwal, Indian 2, Kamalhasaan, 21th Sep 2022

காஜல் அகர்வால் குதிரை மீது ஏறி சவாரி செய்யும் காட்சியை பதிவு செய்துள்ள நிலையில் இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் கூறியிருப்பதாவது: குழந்தை பிறந்த பின்பு உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய உடல் எடையை கொண்டு வருவது என்பது ஒரு சவாலான காரியம். தற்காப்புக்கலை பயிற்சியின் போது தனது உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் , நீண்ட நேரம் ஜிம்மில் சென்று உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறைவது ஒரு பெரிய காரியமாக உள்ளது.

மேலும் பெண்கள் தங்கள் உடலை நினைத்து கவலை கொள்ளாமல் மீண்டெழ வேண்டுமென்றும் நாம் ஆர்வத்துடன் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

KajalAgarwal, Indian 2, Kamalhasaan, 21th Sep 2022

மேலும் ’இந்தியன் 2’ படத்திற்காக தயாராகி வருவதாகவும் புதுப்புது திறன்களை இந்த படத்திற்காகத்தான் கற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காஜல்அகர்வாலுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

adbanner