நடிகை சமந்தாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை? காரணம் வெளியானது

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன் தாரா, விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்த படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது, தெலுங்கு சினிமா மற்றும் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தாவுக்கு சரும பிரச்சினை ஏற்பட்டு இருப்பதால், வெளிநாட்டில் சிகிச்சைப் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்னை ஏற்பட்டது. பாலிமார்பஸ் லைட் எரப்ஷன்’ என்ற தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதிக வெளிச்சத்தில் நடித்ததால் அலர்ஜி ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். இதன் காரணமாக ‘அஞ்சான்’ படப்பிடிப்பின்போதும் அவர் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை தற்போது ஓய்வில் இருப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் பொது வெளியில் தோன்ற மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version