புளூசட்டை மாறனை இறங்கி ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறேன் – கெளதம் மேனன்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில்உருவான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த படம் 4 நாட்களில் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்திற்கு பெரும்பாலானவர்கள் பாசிட்டிவ் விமர்சங்களை கொடுத்த போதிலும் ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை தந்துள்ளனர்.குறிப்பாக புளூசட்டை மாறன் ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாஸ் நடிகர்களின் படங்களையும் கழுவி ஊற்றுவது போல் இந்த படத்தையும் கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் இயக்குனர் கௌதம் மேனன் கூறியபோது ஒரு படத்தை விமர்சனம் செய்யும்போது மனசாட்சியுடன் விமர்சனம் செய்ய வேண்டும் என்றும் அந்த படத்தில் உள்ள குறைகளை தாராளமாக சுட்டிக்காட்டலாம் என்றும் ஆனால் அதற்கு ஒரு கண்ணியம் வேண்டும் என்றும் கூறினார்

மேலும் புளூசட்டை மாறன் விமர்சனத்தை கண்டுகொள்ள வேண்டாம் என்று பலர் சொல்வார்கள் என்றும் ஆனால் என்னை பொருத்தவரை இறங்கி ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறேன் என்றும் அவர் ஆத்திரத்துடன் கூறியுள்ளார். புளூசட்டை மாறன் மட்டுமின்றி படத்தின் கதையை நடிப்பை விமர்சிக்காமல், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்பவர்களுக்கு கெளதம் மேனனின் நடவடிக்கை பூனைக்கு மணி கட்டும் ஆரம்பமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.