‘எனை நோக்கி பாயும் தோட்டா’ தோல்வியடையக் காரணம்? கெளதம் மேனன் கருத்து

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது என்பதும் தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் தோல்விக்கு யார் காரணம் என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கௌதம் மேனன் கூறுகையில் ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை நாங்கள் நல்ல படமாக தான் எடுக்க முயற்சித்தோம். ஆனால் எங்கள் முயற்சி தோல்வி அடைந்தது.

GowthamMenon, Danush, Ennai nokki Payum Thodda, 20th Sep 2022

அந்த படத்தின் தோல்விக்கு பல காரணங்கள் இருக்கின்றன, அந்த படத்தின் படப்பிடிப்பின்போது தயாரிப்பாளருக்கும் தனுசுக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனுஷூக்கு அந்த படத்தின் மீது பெரிய அளவில் ஆர்வம் இல்லை. ஒரு கட்டத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக வேகவேகமாக முடித்தோம். அதை ஒரு படமாகவே என்னால் முழுமையாக முடிக்க முடியவில்லை. ‘மறுவார்த்தை’ பாடலை கூட நாங்கள் நினைத்தது போல படமாக்க முடியவில்லை. தனுஷ் டப்பிங் செய்ய 5 மணி நேரம் மட்டுமே வந்தார்’ என்று கூறினார்.

GowthamMenon, Danush, Ennai nokki Payum Thodda, 20th Sep 2022

’மேலும் தனுஷுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய எனக்கு ஓகே தான் என்றும் ஆனால் அவரிடமிருந்து அழைப்பு வர வேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார்.