‘பொன்னியின் செல்வன்’ குறித்து நடிகர் ஜெயராம் சொன்ன அனுபவ பகிர்வு

மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ’பொன்னியின் செல்வன்’ குறித்த பேட்டிகள் சமூக வலைதளங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் வீடியோக்கள் மற்றும் புரோமோஷன் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Manirathnam, PonniyinSelvan, Karthi, Jeyam Ravi , Jeyaram, 20th Sep 2022

இந்த நிலையில் ’பொன்னின் செல்வன்’ படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோரும் பேசும் வீடியோவை லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ஜெயராம் மணிரத்னம் முதன் முதலாக ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது ’பொன்னின் செல்வன்’ புத்தகம் படித்து இருக்கீர்களா? என்று மணிரத்னம் கேட்டார். நான் படித்ததில்லை என்று கூறினேன். அதற்கு பிறகு சோழ பேரரசு குறித்து ஏதாவது தெரியுமா? என்று கேட்டார். அப்போது நான் ’தெரியும் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டியது’ என்று கூறினேன்.

Manirathnam, PonniyinSelvan, Karthi, Jeyam Ravi , Jeyaram, 20th Sep 2022

அதன்பிறகு அவர் ஒரு சார்ட் எடுத்து காண்பித்தார். இதுதான் சோழர்களின் தலைநகரம் தஞ்சை, இதுதான் கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை என்று அவர் விரிவாக சார்ட்டை காண்பித்து விளக்கியவுடன் ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை படித்த உணர்வு ஏற்பட்டது என்று கூறினார்.

அதேபோல் ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகியோர்களும் இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை கூறியிருந்தனர்.இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

adbanner