நடிகை துஷாரா விஜயனின் தந்தை யார் தெரியுமா ?

’சார்பாட்டா பரம்பரை’ மற்றும் ’நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களில் நடித்த நடிகை துஷாரா விஜயன் திமுக பிரபலம் ஒருவரின் மகள் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dushara Viyajan, Nadsathiram Nakarkirathu, Sharpadda, 20th Sep 2022

நடிகை துஷாரா விஜயன் ‘போதை ஏறி போச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததையடுத்து அவர் குறும் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டரில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் வெளியான ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்திலும் ஒரு துணிச்சலான பெண் கேரக்டரில் நடித்தவர் என்பதும் இந்த கேரக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் தெரிந்ததே.

Dushara Viyajan, Nadsathiram Nakarkirathu, Sharpadda, 20th Sep 2022

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சாணார்பட்டி என்ற பகுதியில் தெற்கு மாவட்ட ஊராட்சி குழு மாவட்ட கவுன்சிலராக உள்ளவர் தான் விஜயன். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் என்பதும் அமைச்சர் ஐ பெரியசாமியின் நெருங்கிய நண்பர்களின் ஒருவரும் என்பது குறிப்பிடதக்கது. கடந்த 40 ஆண்டுகளாக திமுகவில் இவர் செல்வாக்குடன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை துஷாரா விஜயனின் தந்தை ஒரு திமுக பிரபலம் என்பது பலரும் அறியாத ஒரு ஆச்சரியமான தகவலாகும்.

adbanner