‘இந்தியன் 2’ இல் வித்தியாசமான புதிய கெட்டப்பில் இருக்கும் கமல்ஹாசன்.

Indian 2, Kamal Hasan, Kajal agarwal, shankar, 20th Sep 2022

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தாடியை எடுத்துவிட்டு கமல்ஹாசன் வித்தியாசமான புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புதிய கெட்டப் தான் ‘இந்தியன் 2’ படத்தின் கெட்டப்புகளில் ஒன்று என்று கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக தாடியுடன் இருந்த கமல்ஹாசன் ’விக்ரம்’ திரைப்படத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 நிகழ்ச்சியிலும் தாடியுடன் தான் தோன்றினார் என்பது தெரிந்ததே.

Indian 2, Kamal Hasan, Kajal agarwal, shankar, 20th Sep 2022

இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் காஜல் அகர்வால் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் ப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் கடந்த சில நாட்களாக ராம் சரண் தேஜாவின் ’ஆர்சி 15’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். இன்று முதல் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் பத்து நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின்பு மீண்டும் ‘ஆர்சி 15’ படப்பிடிப்பில் அவர் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

Indian 2, Kamal Hasan, Kajal agarwal, shankar, 20th Sep 2022

ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் லைகா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டுக்குள் முடிவடையும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

adbanner