திரையுலகில் லெஜண்ட் சரவணனின் அடுத்த பரிணாமம்?

‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் சரவணா ஸ்டோர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்து சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே.

Legend Saravanan, 19th Sep 2022

இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் அடுத்த படத்திற்காக தயாராகி வருவதாக கூறப்பட்டது. மேலும் முதல் படத்தில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்த லெஜண்ட் சரவணன், அடுத்ததாக ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக அவர் யூத் ஆக மாறுவதற்கு ஒர்க்கவுட் செய்து உடல் எடையை குறைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு அதிகார பூர்வமாக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஸ்லிம்மாக இருப்பதை அடுத்து அவர் ரொமான்ஸ் நாயகனாக நடிக்க தயாராகி விட்டதாக கருதப்படுகிறது.

Legend Saravanan, 19th Sep 2022

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான லெஜண்ட் சரவணன் புகைப்படத்தை பார்த்த பலரும் அவர் உடல் எடை குறைத்து இளைஞராக மாறிவிட்டதாக கூறினர்.

adbanner