டிசம்பரில் வெளியாகும் 4 மாஸ் படங்கள்?

Danush, Vaththi, Paththuthala , Simbu, Ruthran, Ragavalawrence, Avatar 2, Gowtham Karthik, 19th Sep 2022

கடந்த சில மாதங்களாக மாஸ் நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த மாதம் தனுஷின் ’நானே வருவேன்’ மற்றும் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் அருண்விஜய்யின் ‘பார்டர்’, நயன் தாராவின் ‘கோல்ட்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ மற்றும் கார்த்தியின் ‘சர்தார்’ படங்கள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் சிம்பு, தனுஷ் படங்கள் உள்பட 4 மாஸ் படங்கள் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான தகவலின்படி தனுஷின் ’வாத்தி’ படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே போல் சிம்பு நடித்துள்ள ’பத்து தல’ என்ற திரைப்படம் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணா என்பவரின் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ’பத்து தல’ திரைப்படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

Danush, Vaththi, Paththuthala , Simbu, Ruthran, Ragavalawrence, Avatar 2, Gowtham Karthik, 19th Sep 2022
Danush, Vaththi, Paththuthala , Simbu, Ruthran, Ragavalawrence, Avatar 2, Gowtham Karthik, 19th Sep 2022

மேலும் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலை அள்ளி குவித்த ’அவதார்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘அவதார் 2’ படம் டிசம்பர் 16-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக பல ஆண்டுகள் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Danush, Vaththi, Paththuthala , Simbu, Ruthran, Ragavalawrence, Avatar 2, Gowtham Karthik, 19th Sep 2022

இதனை அடுத்து டிசம்பர் 23ஆம் தேதி ராகவா லாரன்ஸ் நடித்த ’ருத்ரன்’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ராகவா லாரன்ஸ், சரத்குமார் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ருத்ரன்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது தெரிந்ததே.

Danush, Vaththi, Paththuthala , Simbu, Ruthran, Ragavalawrence, Avatar 2, Gowtham Karthik, 19th Sep 2022

மொத்தத்தில் டிசம்பர் மாதம் சிம்பு-தனுஷ் ரசிகர்கள் உள்பட சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமான மாதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.